6 Feb 2024

மட்டக்களப்புக்கு மேலும் அழகு சேர்க்கும் வெளிநாட்டுப் பறவைகள்.

SHARE

மட்டக்களப்புக்கு மேலும் அழகு சேர்க்கும் வெளிநாட்டுப் பறவைகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரை பெரு நிலப்பரப்பின் போரதீவுப்பற்றப் பிரதேசத்தில் தற்போது பெரும்போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நிலையில் வயல் நிலங்களில் வலசை வரும் அதிகளவு வெளிநாட்டுப் பறவைகள் இரை தேடி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

வெளிநாட்டுப் பறவைகள் உள்நாட்டுக்கே உரித்தான கொக்கு, மைனா, நாரைக்கொக்கு, ஆள்காட்டிஉள்ளிட்ட பல பறவைகளுடன் இணைந்து கூட்டம், கூட்டமாக வயல் நிலங்களில் இரை தேடி  வருவதையும், அவதானிக்க முடிகின்றது.

பல வர்ணங்களுடன் பார்ப்பதங்கு அழகாகக் காட்சி தரும் பறவைகளை அப்பகுதி மக்களும் அதன் காட்சிகளையும் அழகையும் கண்டு இரசித்து வருகின்றனர்.

பூகோள ரீதியில் வட துருவத்திலிருந்துதான் அதிக பறவைகள் வருகின்றன. இதனை இடம்பெயரும் பறவைகள் என அழைப்பதில்லை அதனைவலசை வரும் பறவைகள்என அழைக்கப்படுகின்றன. இவ்வாறு பறவைகள் மாத்திரமல்ல வண்ணாதிப்பூச்சி, சிங்கறால், திமிங்கலம், நீலத்திமிங்கலம், உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களும் வருகின்றன. இது வருடாந்தம் வருகின்றன. இது பலநூற்றாண்டு காலமாக இடம்பெற்று வருகின்றன. இதுசூழல் வெப்பநிலைக்கு உள்ள பிராணிகளாகவும், இளஞ்சூட்டுக்குருதியுள்ள பிராணிகளாகவும்தங்களுடைய வெப்ப நிலையை தாங்களே உணரக்கூடியதாக உள்ளதான சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.








SHARE

Author: verified_user

0 Comments: