15 Dec 2023

சைவக்குருமார் சங்கத்தின் கல்குடா வலயத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்ளை வழங்கி வைப்பு.

SHARE

சைவக்குருமார் சங்கத்தின் கல்குடா வலயத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்ளை வழங்கி வைப்பு.

சைவக்குருமார் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலயத்தின் ஏற்பாட்டில் அவ்வலயத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்ளை வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை(14.12.2023) மாலை சந்திவெளியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.

சைவக்குருமார் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவஸ்ரீ பு.ரதிகரன் ஐயா அவர்களின் ஒருங்கிணைப்பில், திருகோணமலை ஆலங்ககேணி அருள்மிகு அரிஓம் சிவசக்தி லஸ்மி நாராயணர் ஆலய ஸ்தாபகர் எம்.ஆர்.பன்னீர்செல்வம் (சிவத்திரு பொட்டுக்காளி ஐயா) அவர்களின் 60வது பிறந்த தினைத்தை முன்னிட்டு அவரின்  அனுசரணையில் சிவஸ்ரீ கா.கிருஸ்ணபிள்ளைக் குருக்கள் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது கிரான் பிரதேச செயலாளர் சு.ராஜ்பாபு, கல்குடா கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் .ஜெயவதனன், கலாசார உத்தியோகஸ்த்தர் .சிவராம், மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சைவக்குருமார் சங்கத்தின் நிருவாகத்தினர், உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

கல்குடாக கல்வி வலயத்தின் கீழுள்ளள் பின்தங்கிய பாடசாலைகளில் கல்வி பயிலும் 68 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு புத்தகப் பை, கொப்பிகள், அடங்கலாக தலா 3000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சைவக்குருமார் சங்கத்தினர் மாணவர்களின் கல்வி வளற்சியில் அக்கறை கொண்டு அவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கியிருப்பதை முன்னிட்டு கலந்து கொண்ட அதிதிகள் அனுசரணையாளர் எம்.ஆர்.பன்னீர்செல்வம் ஐயா உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
















































SHARE

Author: verified_user

0 Comments: