24 Dec 2023

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தக சங்கத்தின் நிதி அனுசரணையுடன் நிவாரணம் வழங்கிவைப்பு.

SHARE


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தக சங்கத்தின் நிதி அனுசரணையுடன் நிவாரணம் வழங்கிவைப்பு.

பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தக சங்கத்தின் ஒரு மில்லியன் நிதி அனுசரணையில், மட்டக்களப்பில் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் சனிக்கிழமை(23.12.2023) இடம்பெற்றது.

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோராவளி கிராமத்தில் ஒரு அங்கவீனமானவர் உட்பட 62 பொதிகளும், பேரிலாவெளி கிராமத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் உட்பட  47 பொதிகளும், திகிலிவெட்டை கிராமத்தில் ஒரு அங்கவீனமானவர் உட்பட 66 பொதிகளும் மொத்தமாக 175 குடும்பங்களுக்கு இந்த  5000 பெறுமதியான  உலர் உணவுப்பொதிகள் அந்தந்த கிராம சேவகர்களின் உதவியுடன் வழங்கி வைக்கப்பட்டன.

இது கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் ராஜ்பாபு தலைமையிலும், லோ.தீபாகரனின் ஒருங்கிணைப்பின் கீழும், பொருளாதார உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துக உத்தியோகத்தர்களின் உதவியுடனும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






















 

SHARE

Author: verified_user

0 Comments: