2 Nov 2023

கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்து வைப்பு.

SHARE

கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்து வைப்பு.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தன்னார்வ தொண்டர் அமைப்பான வன்ஹோப் நிறுவனத்தின் நிதியுதவியில் திறன் வகுப்பறை(ஸ்மார் கிளாஸ் றூம்) திறந்து செவ்வாய்கிழமை(31.10.2023) வைக்கப்பட்டுள்ளது.

வித்தியாலய அதிபர் எஸ்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வன்னிஹோப் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரி.முகமட் பாரீஸ், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.யாஸீர் அரபாத், உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.பரமதயாளன் வன்னிஹோப் அமைப்பின்  மாவட்ட இணைப்பாளர்களான எஸ்.ரேகா,கணேசமூர்த்தி உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டு திறன் வகுப்பறையைத் திறந்து வைத்துள்ளனர்.

கற்றல் கற்பித்தல் வளங்கள் குறைவாகக் காணப்படும் ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த கல்விச் சமூகத்தினர் வன்னிஹோப் அமைப்புக்கு விடுத்த வேண்டுகோளிற்கிணங்க சுமார் 8 இலெட்சம் ரூபா பெறுமதியான திறன்பலகை உள்ளிட்ட நவீன கற்றல் கற்பித்தலுக்குரிய உபகரணங்களை அவுஸ்ரேலியா சிவன் அருள் பௌவுண்டேஷன் மற்றும் அமெரிக்கா நல்லையா பௌண்டேஷன் ஆகியவற்றின் நிதியுதவியில் அவுஸ்ரேலியாவைத் தலைமையகமாகக் கொண்டு இலங்கையில் செயற்பட்டு வரும் வன்னிஹோப் அமைப்பு இதனை வழங்கியுள்ளது.

இலங்கையின் நாலாபாகமும் எதுவித வேறுபாடுகளுமின்றி சமூகசேவையை மேற்கொண்டு வரும் தாம் கல்விச் செயற்பாடுகளுக்காக அறுபது வீதமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக வன்னிஹோப் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரி.முகமட்.பாரீஸ் இதன்போது தெரிவித்தார்.



















SHARE

Author: verified_user

0 Comments: