21 Nov 2023

நவகிரிநகரில் இரண்டு கிலோ மீற்றர் வீதிக்கு கார்பட் இடும் வேலைத்திட்டம்

SHARE

நவகிரிநகரில் இரண்டு கிலோ மீற்றர் வீதிக்கு கார்பட் இடும் வேலைத்திட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதிவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லைப்புறக் கிராமமாக அமைந்துள்ள நவகிரி நகர் கிராமத்தில் இரண்டு கிலோமீற்றர் வீதிகளுக்கு கார்பட் இட்டு புனரமைப்புச் செய்யும் வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.நவகிரிக் கிராம மக்கள் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளிற்கிணங்க இவ்வீதிகள் புனரமைப்புச் செய்யப்படுகின்றன

இவ்வீதி புனரமைப்பு வேலைத்திடங்களை வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிரதிநிதியாக கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர்.

யுத்ததின் வடுக்களையும் வறுமையின் பிடியிலும் சிக்கித்தவிக்கும் மக்கள் சிறந்த போக்வரத்துக்கள் அமையும்மிடத்து தமது வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்வதற்கும் கல்வியில் சிறந்து விளங்கவும், எல்லைப் புறங்களிலிருந்து பாதுகாக்கக் கூடியளவிற்கும், என இதன்போது பிரசாந்தன் கருத்துத் தெரிவித்தார். 

















SHARE

Author: verified_user

0 Comments: