களுவாஞ்சிகுடி நாற்சந்தியில் வீதிச் சமிக்ஞை பொருத்துவது குறித்து வீதி ஆராய்வு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி பிராதான வீதியில் அமைந்துள்ள நாற்சந்தியில் வீதிச் சமிக்ஞை பொருத்துவது தொடர்பாக கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வீதி அபிவிருத்தி அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவெனான்று நேரில் விஜயம் செய்து உரிய இடத்தை பார்வையிட்டு ஆராய்ந்து சென்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடுவாங்கரைப் பிரதேசத்தையும், எழுவாங்கரைப் பிரதேசத்தையும் இணைக்கும் பிரதான இடங்களில் ஒன்றாக களுவாஞ்சிகுடி நகரம் அமைந்துள்ளதுடன், உரிய நாற்சந்தி அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் வங்கிகள், பிராதான வர்த்தக நிலையங்கள், தேசியபாடசாலை, ஆதார வைத்தியசாலை, பொதுச்சந்தை பிரதான பேரூந்து தரிபிடம், உள்ளிட்ட பல பொது இடங்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள நாற்சந்தியை ஊடறுத்து தினமும் அதிகளவு பிரயாணம் செய்து வருகின்ற இந்நிலையில் அச்சந்தியில் வீதிச் சமிக்ஞை இல்லாத காரணத்தால் விபத்துக்களும் அவ்வப்போது இடம்பெற்று இடம்பெறுகின்றன.
இவ்விடையும் குறித்து உரிய நாற்சந்தியில் வீதிச் சமிக்ஞையின் அவசியம் குறித்தும் அப்பகுதி பொதுமக்கள் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சினேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து, வீதி அபிவிருத்தி அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவெனான்று நிலமையை நேரில் விஜயம் செய்து ஆராய்ந்துள்ளது.
அந்த வகையில் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் பிரதிநிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன், வீதி அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர், பணிப்பாளர் நாயகம், திட்டமிடல் பிரிவு, மாகாணப் பணிப்பாளர், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச சபைச் செயலாளர் உள்ளிட்ட அடங்கிய குழுவினரே இவ்விடையம் குறித்து ஆராய்ந்து சென்றுள்ளனர்.
0 Comments:
Post a Comment