உலக நோயாளர் பாதுகாப்பு தினம் களுவாஞ்சிகுடி ஆதர வைத்தியசாலையில் அனுஸ்ட்டிப்பு.
உலக நோயாளர் பாதுகாப்பு தினமான 2023 புரட்டாதி 17 அன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதர வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்களால் நடை பனி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. வைத்தியசாலையிலிருந்து ஆரம்பமான இந்நடை பவனி பட்டிருப்பு வீதியூடாகச் சென்று எருவில் கிராமத்தினூடாகச் சென்று மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தது.
உலக சுகாதார இஸ்தாபனம் வருடாந்தம் புரட்டாதி மாதம் 17 திகதி நோயாளர் பாதுகாப்பு தினமாக அனுஸ்ட்டித்து வருகின்றது. இந்நிலையில் இவ்வருடத்தின் கருப்பொருளாக நோயாளர் பாதுகாப்புக்காக நோயாளரை ஈடுபடுத்தல், என்பதுடன் நோயாளரின் குரலை உயர்த்துவோம் எனும் தொணிப் பொருளின் கீழும் அனுஸ்ட்டிக்கப்டுகின்றது.
வைத்தியசாலையின் தர முகாமைத்துவ பிரிவு, தொற்று நோய்த் தடுப்பு பிரிவு, ஆரோக்கிய வாழ்வு நிலைய பிரிவினரின், இது ஏற்பாட்டில் இடம்பெற்றது.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் க.புவனேந்திரநாதன், தலைமையில் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு நடைபவனியில் வைத்தியசாலையில் கடமை புரிகின்ற வைத்தியர்கள், தாத்தி உத்தியோகஸ்த்தர்கள், உள்ளிட்ட ஏனை சகஉத்தியோகஸ்த்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment