8 Aug 2023

அதிக உஷ்னத்தால் முற்றாக வற்றிப்போயுள்ள குளங்கள்.

SHARE

அதிக உஷ்னத்தால் முற்றாக வற்றிப்போயுள்ள குளங்கள்.

தற்போது நிலவிவரும் அதிக வெப்பம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பிலல் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள பெரியபோரதீவு, கோவில்போரதீவு, பொறுகாமம், வெல்லாவெளிபழுகாமம்உள்ளிட்ட பல இடங்களிலும் அமைந்துள்ள சிறிய குளங்கள் முற்றாக  வற்றியுள்ளனர்.

 இந்நிலையில் வற்றிய குளங்களில் அப்பகுதி மக்கள் அத்தாங்குகரப்புவலைபோன்றவற்றைக் கொண்டு பாரம்பரிய முறைப்படி மீன் பிடித்து வருவதோடுஉள்ளிநாட்டு வெளிநாட்டு பறவைகளும் அக்குளங்களில்இரைதேடி வருகின்றன.

அதிக வெய்யில் காரணமாக சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளதால்அப்பகுதியிலுள்ள கால்நடைகளும் குடிநீருக்காக அலைந்து திரிவதையும் அவதானிக்க முடிகின்றது.
















SHARE

Author: verified_user

0 Comments: