வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் திறன் வகுப்பறை திறந்து வைப்பு.
இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமின்றி முஸ்லிம், மற்றும் சிங்கள மக்கள் மத்தியிலும், பல சமூக சேவைகளை மேற்கொண்டுவரும் வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை(28.08.2023) திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது.இதன்போது கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறன் வகுப்பறையைத் திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில், வன்னிஹோப் நிறுவனத்தின் பணிப்பாளர்களான றஞ்சன் சிவஞானசுந்தரம்(அவுஸ்ரேலியா), வைத்தியர் மாலதி வரன் (அவுஸ்ரேலியா), எம்.ரி.எம்.முகமட் பாரீஸ்(இலங்கை), மற்றும் இணைப்பாளர்களான சீ.ரேகா, ஆர்.கணேசமூர்த்தி, மற்றும், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள். கல்விச் சமூகத்தினர் உள்ளிட்ட கலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அவுஸ்ரேலியாவில் தலைமையாகக் கொண்டு இலங்கையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும், தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் எதுவித பேதங்களுமின்றி, கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், உள்ளிட்ட பல துறைகளையும், மேம்படுத்தும் முகமாக தன்னார்வமாக சமூகசேவைகளை மேற்கொண்டுவரும் வன்னிஹோப் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு இதன்போது கல்விச் சமூகத்தினர் தமது வாழத்துக்களை இதன்போது தெரிவித்ததோடு, அவர்களது சேவைக்கு கல்விச் சமூகனத்தினரால் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment