4 Jul 2023

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் அதிக பெண்கள் அணி பங்குபெற்ற முதலாவது மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்று போட்டி.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் அதிக பெண்கள் அணி பங்குபெற்ற முதலாவது மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்று போட்டி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகளிர் உதைப்பந்தாட்ட அணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியி ஆரம்ப நிகழ்வு  கடந்த முதலாம் மற்று இரண்டாம் திகதிகளில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது. வேல்முருகன் டிஸ்ரிபியூட்டர்ஸ் ஸ்தாபனத்தினரின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் 4 கல்வி வலயங்களில்  இருந்து 16 பாடசாலைகள் கலந்து கொண்டு இடம்பெற்ற பெண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வானது அதிதிகள் வரவேற்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டு, 16 அணிகளின் கொடியேற்றத்துடன் முதல் போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இரண்டு நாட்களாக மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டிக்கு நான்கு அணிகள் தமது திறமைகளை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தனர். இறுதிப் போட்டிக்கு மண்முனை மேற்கு கல்வி வலையத்திற்கு உட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலயமும். கடுக்காமுனை வாணி வித்தியாலய அணியும் தெரிவு செய்யப்பட்டு இதில் பஞ்சனை பாரிவித்தியாலய பாடசாலை அணி 3 - 0 என்ற வீதத்தில் வெற்றி பெற்றனர். இந்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் மூன்றாம் இடத்தினை. அம்பிளந்துறை கலைமகள் மகாவித்தியாலய பெண்கள் அணியினரும் நான்காவது இடத்தினை வாகரை கட்டுறிவு பாடசாலையின் பெண்கள் அணியினரும் பெற்றுக் கொண்டனர்.

இந்த சுற்று போட்டியின் சிறந்த வீராங்கணையாக வாகரை கட்டுறிவு பாடசாலையின் எஸ்.நந்தினி தெரிவு செய்து செய்யப்பட்டு அவருக்கு ஒரு துவிசக்கர வண்டியும் இங்கு பரிசாக வழங்கி வைக்கப்பட்டது. இப்போபோட்டியில் பங்கு பற்றிய நடுவர்களுக்கும் விசேட பரிசல்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன். வெற்றி பெற்ற அணி வீரருக்கு பண பரிசீல்களுக்கு பதிலாக அவர்களுக்கு உரிய உதவி பந்தாட்ட விளையாட்டுப் பொருட்கள் பரிசாக வழங்கி வைக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் மூன்று இடங்களைப் பிடித்த பாடசாலைகள் மாணவர்களுக்கு வேண்டிய உதைப்பந்தாட்ட பயிற்சிகளும்  எதிர்வரும் காலங்களில் வழங்கி வைக்கப்பட உள்ளன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலய உடற்கல்வி  உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.லவக்குமார் கல்குடா உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் .ரமேஸ், மட்டக்களப்பு மேற்கு உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் .சந்திரகுமார், வேல்முருகன் டிஸ்ரிபியூட்டர்ஸ் பங்குதாரர்களான கா.சதீசன், கோட்டமுனை விளையாட்டு கிராமத்தின் பணிப்பாளர்களான எஸ்.ரஞ்சன்கோட்டமுனை விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பீ.சடாட்சரராஜாநடுவர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் உயர் அதிகாரிகள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கிழக்கு மாகாண பெண்கள் உதைப்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக பின்தங்கிய பிரதேச பாடசாலைகள். தற்போது மாகாண மட்டத்தில் சாதனை புரிந்து தேசிய மட்டத்தில் அவர்களது திறமைகள் வழிபட்டு வருவதை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனையின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இந்த விசேட பெண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்று போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சுற்று போட்டியில் முதலாம் இடத்தை பெறும் அணிக்கு ஒரு லட்சம் ரூபாயும். இரண்டாவது வெற்றி கொள்ளும் அணிக்கு 75 ஆயிரம் ரூபாயும். மூன்றாவதாக வரும் அணிக்கு 50,000. பரிசல்கள் வழங்க பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் அதிக பெண்கள் அணி பங்குபற்றிய முதலாவது உதைப்பந்தாட்ட சுற்று போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.





















 

SHARE

Author: verified_user

0 Comments: