களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் ஏற்பாட்டில் பண் ஓதுதல் மற்றும் நாயன்மார்கள் தொடர்பிலான பேச்சுப் போட்டி.
மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் திருமுறை முற்றோதல் நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது. ஆலய பரிபாலன சபைத் தலைவர் க.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்று வரும் இத்திருமுறை முற்றோதல் நிகழ்வு எதிர்வரும் 2023.08.06 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது.
இதன் மற்றுமோர் அங்கமாக களுதாவளை இந்துமாமன்ற அறநெறிப் பாடசாலைகளுக்கிடையிலான பண் ஓதுதல் மற்றும் நாயன்மார்கள் தொடர்பிலான பேச்சுப் போட்டி நிகழ்வு ஒன்றும் ஞாயிற்றுக்கிழமை (04.06.2023) களுதாவளை கலாசார மண்டபத்தில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தினால் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment