14 Mar 2023

வெருகல் பிரதேசத்தில் முதன்முறையாக இடம்பெற்ற மாபெரும் இரத்ததான முகாம் வெற்றியளிப்பு.

SHARE

வெருகல் பிரதேசத்தில் முதன்முறையாக இடம்பெற்ற மாபெரும் இரத்ததான முகாம் வெற்றியளிப்பு.

வெருகல் பிரதேச செயலகத்தின் முன்னெடுப்பில் இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையோடு பிரதேசத்தில் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தஉதிரம் கொடுத்து உயிர் காப்போம்எனும் தொனிப்பொருளிலமைந்த மாபெரும் இரத்ததான முகாம் வெற்றியளித்துள்ளதாக பிரதேச செயலாளர் எம்.. அனஸ் தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக வெருகல் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் திங்களன்று 13.03.2023 நிகழ்வு இடம்பெற்றது.

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்இ ஈச்சிலம்பற்று பொலிஸார்இ பிரதேசப் பொதுமக்கள்இ தொண்டர்கள்இ வெருகல் பிரதேச வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்இ நிறுவன அலுவலர்கள் உள்ளிட்ட குருதிக் கொடையாளிகள் கலந்து கொண்டு இரத்தத்தைத் தானமாக வழங்கியதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ரீதிலீப்குமார் தெரிவித்தார்.

இரத்த வங்கிக்குப் பொறுப்பான வைத்தியர் எம்.. இர்பான் தலைமையிலான மூதூர் இரத்த வங்கியின் உத்தியோகத்தர்களும் திருகோணமலை இரத்த வங்கியின் அலுவலர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு இரத்தச் சேகரிப்பில் ஈடுபட்டனர். சுமார் 60 பைந்து இரத்தம் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.




















 

SHARE

Author: verified_user

0 Comments: