தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஐக்கியப்பட்டு ஒன்று சேருமாறு ஐக்கிய அமெரிக்க தமிழ்ச் செயற்குழு (USTAG) கோரிக்கை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஐக்கியப்பட்டு ஒன்றுசேருமாறு ஐக்கிய அமெரிக்க தமிழ்ச் செயற்குழு (USTAG) வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் உள்ள சகல
தமிழ் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவில்
செயல்படும் ஐக்கிய அமெரிக்க தமிழ்ச் செயற்குழுவின் (USTamil Action Group - USTAG) தலைவர் அனன் பொன்னம்பலம்
அவர்களால் கையொப்பமிடப்பட்டு அனுப்பியுள்ள கடிதத்திலே மேலுள்ளவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
எந்த விதிவிலக்குமின்றி
தமிழ் அரசியலில் ஒற்றுமை என்பது முற்றிலும் இன்றியமையாததாக இருக்கும் இவ்வேளையில் தலைமை
அதற்கு நேர்மாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது என்ற செய்தியால் உலகெங்கிலும்
உள்ள புலம்பெயர் தமிழர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து
துண்டாடப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய ஐக்கியத்தை மீண்டும் நிறுவ முடியும்
என்ற முன்மொழிவு ஒரு ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற அனுமானமாகும். தனித்துச் செல்லும்
ஒவ்வொரு தமிழ்க் கட்சிகளும் தேர்தலுக்குப் பிறகு ஒற்றுமை என்ற நோக்கத்திற்காக பேசுவதற்கு
எந்தத் தமிழ்ப் பிரதிநிதித்துவமும் இல்லாத அளவுக்கு அழிவுகரமான முறையில் தமிழ் வாக்குகளைப்
பிரித்துவிடும்.
இதில் மிகவும் வயிற்றெரிச்சலுக்கும்
வெட்கப்பட வேண்டியதுமான விடயம் என்னவெனில் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
என்று இலங்கைப் பிரதமர் அறிக்கை வெளியிடுவதைப் பார்க்கும்போதும் மேலும் இந்த பிளவுக்கு
மத்தியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ் கட்சித் தலைவர்களைச் சந்திப்பதை ஒரு குறியீடாகக்
காட்டியமையும் குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் தமிழ்
மக்களாகிய நாம் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்று கூடி தற்போதைய துர்ப்பாக்கிய உத்தியை
மறுபரிசீலனை செய்யுமாறும் அதற்குப் பதிலாக அனைத்துக் கட்சிகளின் ஒரே தமிழ்த் தேசியக்
கூட்டமைப் (TNA) ஆக ஒன்றிணையுமாறும், இதற்காக ஐக்கிய முன்னணியின் நோக்கத்திற்காகவும்
பலத்திற்காகவும் நாம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக உள்ளாட்சி தேர்தல். மேலும்,
மாகாணசபைத் தேர்தல்களிலும் பாராளுமன்றத் தேர்தல்களிலும் எமது மக்கள் விரும்புவது இந்த
ஒற்றுமையைத்தான். நிரந்தர அரசியல் தீர்வு பற்றி இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும்
பேசிக் கொண்டிருக்கும் காலத்தின் தேவை இதுவாகும்.
“ஒன்று பட்டால் உண்டு
வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே". (இந்திய சுதந்திரப் போராட்டத்தின்
போது மகாகவி பாரதியார் பாடிய பாடல்). நமது மக்களின் நல்வாழ்வு கண்ணியம் மற்றும் சுதந்திரமான
தேர்வு ஆகியவை நமது தலைமையின் முதன்மையான குறிக்கோளாக இருக்கும்போது ஒற்றுமை அடையப்படும்
என்பது எங்கள் உறுதியான நம்பிக்கை.
எங்கள் மக்களின் உண்மையான
அபிலாசைகளை பிரதி நிதித்துவப்படுத்துவதற்காக நீங்கள் எங்கள் வேண்டுகோளை காலத்தின் தேவை
கருதி அதிக முக்கியத்துவம் கொடுத்து கருத்தில் எடுத்துக்கொள்வீர்கள் என்று நாங்கள்
நம்புகிறோம். என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment