மட்டுநகர் வாவியில் விளையாடும் வெளிநாட்டுப் பறவைகள்.
மீன்பாடும் தேநாடு என அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழகு சேர்க்கின்றது மட்டக்களப்பு வாவியாகும். சுமார் 103 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த வாவியைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்ற இந்நிலையிலும், பல உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் இந்த வாவி ஈர்த்துள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பு வாவியில் பல வெளிநாட்டுப் பறவைகள் மிகவும் குதூகலத்துடன் இரையுண்டு வாழ்ந்து வருவருவதையும், வாவியை இரசிக்கவருபவர்களுக்கு இக்காட்சிகள் மிகவும் கொள்ளை கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர். வெளிநாட்டுப் பறவைகளுடன், மட்டக்களப்பிலே வாழும் பல புள்ளினங்களும், சேர்ந்து இரைதேடுவதையும் அவதானிக்க முடிகின்றது.
0 Comments:
Post a Comment