18 Jan 2023

உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை.

SHARE

உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை.

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் இராட்சத ஆமை ஒன்று புதன்கிழமை(18.01.2023) காலை கரை ஒதுங்கியுள்ளது. கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் ஆமை ஒன்று கரை ஒதுங்கிக்கிடப்பதை அவதானித்துள்ளனர்.

இவ்வாறு கரை ஒதுங்கிக் கிடந்த ஆமை உயிரிழந்துள்ளதாகவும், இது சுமார் 50 கிலோவிற்கு மேல் நிறை இருக்கும் எனவும் அவ்விடத்திலிருந்த மீனர்வகள் தெரிவித்தனர்.

இதுபோன்று கடந்த வருடமும் இவ்வாறு கிழக்குக் கடற் கரைப் பகுதியில் பல ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.










SHARE

Author: verified_user

0 Comments: