தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக மட்டக்களப்பில் இடம்பெற்ற பயிற்சி செயலமர்வு.
இதன்போது மட்டக்களப்பு
மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும்
கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தகவல் உரிமை
சட்டம் தொடர்பிலும், அந்த சட்டத்தை பயன்படுத்துபவர்கள் எவ்வாறு அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பிலும் மற்றும் பொது மக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும்
எவ்வாறு தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுகிறது என்பது தொடர்பிலும் மிகவும் விரிவாக
எடுத்துரைக்கப்பட்டன.
தகவல் அறியும் உரிமை
சட்டத்தின் ஊடாக எமது உரிமைகளை பாதுகாப்போம் எனும் தலைப்பில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில்
தகவல் அறியும் சட்டம், இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் பொதுவானது ஊடகவியலாளர்களுக்கும்
சிவில் சமூக அமைப்பினருக்கும் சட்டத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் முகமாகவே இச்செயலமர்வு
இடம் பெற்றது.
இலங்கை பத்திரிகை
ஸ்தாபனத்தினால் நடத்தப்பட்ட இந்த பயிற்சி செயலமர்வில் தகவல் அறியும் உரிமை ஆணைகுழுவின்
தலைவர் ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நிதியரசர் உபாலி அபேரத்ன, ஆணைக் குழுவின் ஆணையாளர்களான
சட்டத்தரணி கிஷாலி பிண்டோ ஜெயவர்த்தன, சட்டத்தரணி ஜகத் லியன ஆராய்ச்சி, முஹம்மட் நஜியா,
மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின்
பிரதான நிறைவேற்று அதிகாரி குமார் லோபேஸ், விடிவெள்ளிப் பத்திரிகையின் ஆசிரியர் முகமத்
பைரூஸ், பத்திரிகை ஸ்தாபனத்தின் தகவல் அறியும் உரிமை சட்ட திட்ட உதவியாளர் ஆர்த்தி
ரவிவர்மன், உள்ளிட்ட பலர் இதன் போது கலந்து கொண்டு கருத்துக்களையும் தகவல்களையும் தெரிவித்திருந்தனர்.
0 Comments:
Post a Comment