31 Jan 2023

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் பழங்குடித் தலைவர்களின் ஒன்றிணைந்த ஊடக அறிவித்தல்.

SHARE

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் பழங்குடித் தலைவர்களின் ஒன்றிணைந்த ஊடக அறிவித்தல்.

இலங்கை பழங்குடிச் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மாற்றுக் கொள்கை நிலையத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை வாழ் அனைத்து பழங்குடிச் சமூகக் குழுக்களின் தலைவர்களும் தமக்குரித்தான உரிமைகள் தொடர்பில் பாராளுமன்றச் சட்டமொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக மேற்கொள்ளும் முயற்சி தொடர்பான ஊடக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

அதில் இலங்கை பழங்குடிப சமூகத்தின் சார்பாக பழங்குடி தலைவர் உருவரிகே வன்னில அத்தோ, ரதுகல பிரதேச தலைவர் டானிகல பண்டாகே சுது பண்டா, பொல்பத்த பிரதேச தலைவர் தலா பண்டாகே குணவர்தன, ஹெனானிகல பிரதேச தலைவர் தலா வரிகயே குண பாண்டியா, வாகரை பிரதேச தலைவர் நல்லதம்பி வேலாயுதன், மூதூர் பிரதேச தலைவர் நாகரத்தினம் வர்தன், என். கணகரத்ன, .ஸ்ரீ செல்வம் ஆகியோரும், வசதிபடுத்துனர் சார்பில்      மாற்றுக் கொள்கைளுக்;கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர்  லயனல் குருகே அவர்களும் கையொப்பம் இட்டுள்ளனர். அந்த அறிக்கயில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இந்த அறிவித்தலில் கையொப்பமிட்டுள்ள நாங்கள், 2023 ஜனவரி 17 அன்று, இலங்கை பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பில் பல தசாப்தங்களாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் உட்பட அது குறித்து முன்வைக்கப்பட்ட கொள்கை முன்மொழிவுகளை இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர், பிரதமர் அவர்களால்  எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பலர் அமைச்சர்கள் சந்தித்து கலந்துரையாடி கையளித்தோலுள்ளோம்;. மேலும், 2023 ஜனவரி 18 திகதி அன்று,  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட ஆணையாளர்களை சந்தித்து, இலங்கை வாழ் பழங்குடி சமூகத்தின் உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை எடுத்துறைத்து அதற்கான நீண்டகால தீர்வின் முதற்கட்டமாக  சட்ட கட்டமைப்பொன்றை தயாரிப்;பதற்க்காக பரிந்துரைகளைக் கோரி முறைப்பாடும் தாக்கல்  செய்யப்;பட்டது.

01. இலங்கையில் உள்ள பழங்குடி சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு அந்த சமூகத்தின் தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்களின் கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை அவதானித்து, அவர்களது பங்களிப்புடன், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஊடாக தயாரித்து பழங்குடி சமூக தலைவர்களுடன் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

02. இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவிற்கு பழங்குடி தலைவர்களை அழைத்த பிரதமர், 76வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு முன்னதாக பழங்குடி சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டமூலமொன்றையும், அது குறித்த தேசிய கொள்கையொன்றை அமைப்பதற்கு நடவடிக்கைச் செய்யப்படுமென தெரிவித்தார்.

03. பிரதமர் அவர்கள் பழங்குடி சமூகத்தின் உரிமை மீறல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருக்கு பணித்தார்.

04. பழங்குடிக்களின் கலாசாரம், மொழி, பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்களின் அடையாளத்தை எடுத்துரைக்கும் முக்கிய அம்சங்களை பாடசாலைக் கல்விக்குள் உள்ளடக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பிரதமருடனான கலந்துரையாடலில் பங்குபற்;றிய ஏனைய அமைச்சர்கள் தெரிவித்தனர்.

05. தேசிய மட்டத்திலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது மக்கள் தொகை வகைக்கு ஏற்ப மக்கள் தொகைத் தரவை வகைப்படுத்தும் போது 1963 ஆம் ஆண்டிற்குப் பிறகு பழங்குடியினர் (ஆதிவாசி சமூகம்) எனும் வகைப்படுத்தளை நீக்கி 'வேறு' என்ற வகைப்படுத்தலின் கீழ் அவர்களைச் சேர்ப்பதற்கான நிர்வாக தீர்மானத்தை மாற்றியமைத்து எதிர்கால மக்கள் தொகை கணக்கெடுப்பில்பழங்குடியினர்என்ற வகைப்பாட்டின் கீழ் தரவுகளை சேகரிக்க நடவடிகை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.

06. இலங்கை பழங்குடி சமூகத்தின் உரிமைகளுக்காக முன்மொழியப்படும் புதிய சட்டத்திற்கு ஏனைய கொள்கை வகுப்பாளர்களுடன் இணைந்து தனது அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக சபாநாயகர் அறிவித்தார்.

07. இலங்கை பழங்குடி சமூகத்தின் உரிமைகளுக்காக முன்வைக்கப்படும் புதிய சட்டமூலத்திற்கு அதிகபட்ச அர்ப்பணிப்புடன் ஆதரவளிப்பதாகவும், பழங்குடி உரிமைகள் பற்றிய  சர்வதேச ஏற்பாடுகள் அமுல்படுத்;தல் குறித்;து பாராளுமன்ற கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

08. இலங்கை பழங்குடி சமூகத்தின் உரிமை மீறல்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி அது குறித்து தேவையான சந்தர்ப்பங்களில் விசாரணைகளை நடத்தி குறிப்;பிட்ட சமூகத்தின் உரிமைகளை பாதுகாப்தற்கான பரிந்துரைகளை வழங்குவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தெரிவிக்கப்பட்டது. மேலும், கட்டுப்பாடற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்;படும் நுண்கடன் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற கடன் வழங்கள் காரணமாக குறிப்;பாக பழங்குடிப் பெண்களதும் பிற சமூகங்களினதும் உரிமைகள் மீறல் மற்றும் பாதிப்புக்குள்;ளால் தொடர்பில் தேசிய கொள்கை கட்டமைப்பை நிறுவுவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

இலங்கை பழங்குடி சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான கொள்கை மாற்றங்கள் குறித்து தேசிய மட்டத்தில் குரல் எழுப்புவதற்கு ஆதரவளித்த அனைத்து ஊடகங்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதன்படி, இலங்கை பழங்குடிப சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம் மற்றும் தேசியக் கொள்கையை தாபிப்பதற்கு மனிதநேயம், மனித மாண்பு மற்றும் பன்மைத்துவத்தை மதிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளினது ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE

Author: verified_user

0 Comments: