30 Jan 2023

ஆட்சியாளர்கள் பற்றி தங்களுடைய நிலைப்பாடுகளை மக்கள் வெளியே கொண்டுவருவதற்கான ஒரு தேர்தலே உள்ளுராட்சி மன்ற தேர்தல் – சாணக்கியன்.

SHARE

ஆட்சியாளர்கள் பற்றி தங்களுடைய நிலைப்பாடுகளை மக்கள் வெளியே கொண்டுவருவதற்கான ஒரு தேர்தலே உள்ளுராட்சி மன்ற தேர்தல் – சாணக்கியன்.

இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பற்றி தங்களுடைய நிலைப்பாடுகளை மக்கள் வெளியே கொண்டுவருவதற்கான ஒரு தேர்தலே உள்ளுராட்சி மன்ற தேர்தல் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கல்குடா தொகுதியின் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விழா நேற்று(சனிக்கிழமை) சித்தாண்டியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள இந்த தேர்தல் மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையிலும் சரி வடக்கு, கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையிலும் சரி மிக முக்கிய தேர்தல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக நாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் கூட்டங்களை நடாத்துகின்றோம். அந்த அளவிற்கு இந்த தேர்தல் மிக முக்கிய தேர்தலாக காணப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: