தொண்டர் நிறுவன அலுவலகத்ததை உடைத்து கொள்ளையிட்ட நபர் கைது—வீடியோ கமறா உட்பட பெருமளவு பொருட்கள் மீட்பு.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் தொண்டர் நிறுவனமொன்றின் அலுவகத்தை பட்டப்பகலில் உடைத்து கொள்ளையிட்ட சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் கொள்ளையிடப்பட்ட பெருமளவு பொருட்களையும் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹிம் தெரிவித்தார்.
கல்லடியிலுள்ள மனிதநேய
தகவல் மையம் என்ற தொண்டர் நிறுவனமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
துமிந்த நயணசிறியின் ஆலோசனையின் பேரில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான
பொலிஸ் குழுவினர் குறித்த சந்தேக நபர் கொள்ளையிடப்பட்ட பொருட்களை ஏறாவூர் பகுதிக்கு
விற்பனைக்காக எடுத்துச் சென்றுகொண்டிருந்த சமயம் கல்லடியில் வைத்து கெது செய்யப்பட்டுள்ளார்.
வீடியோ கமறா டெப்கணணி
ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பொருட்கள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர். காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment