10 Oct 2022

மத்தியமுகாம் பிரதேசம் இரவு நேரங்களில் இருளில் முழ்கியுள்ளது -மக்கள் விசனம்.

SHARE

(நூருல் ஹுதா உமர்)

மத்தியமுகாம் பிரதேசம் இரவு நேரங்களில் இருளில் முழ்கியுள்ளது -மக்கள் விசனம்.

பல்லின சமூகங்கள் ஒன்றித்து வாழும் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட மத்தியமுகாம் பிரதேசம் இரவு நேரங்களில் இருளில் முழ்கியுள்ளதாகவும், அதனால் பல்வேறு சீர்கேடுகள், விபத்துக்கள்,  இடம்பெறுவதாகவும் இது தொடர்பில் பிரதேச சபைக்கு பலமுறை அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நாவிதன்வெளி நகர் இருளில் இருக்கின்றது. குறித்த நகரில் பௌத்த விகாரை, கோவில், ஜும்மாப்பள்ளிவாசல், வங்கிகள், பொலிஸ் நிலையம், தனியாருக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், மக்களின் குடியிருப்பு வீடுகள் என பல முக்கிய தளங்கள் இருக்கின்றன. இருளில் நகரே மூழ்கியுள்ளதனால் அச்சநிலை உள்ளது.

இந்த பிரதேசத்தின் நிலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலருக்கும் மக்கள் நேரடியாக தெரிவித்தும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் தெரிவித்தும் பாராமுகமாக இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது விடயமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டவர் முன்வரவேண்டு என மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.



SHARE

Author: verified_user

0 Comments: