23 Oct 2022

இரட்டை விருதுபெற்றார் முனைவர் முருகு தயாநிதி.

SHARE

இரட்டை விருதுபெற்றார் முனைவர் முருகு தயாநிதி.

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரை பெருநிலப்புக்குட்பட்ட அம்பிளாந்துறையைச் சேர்ந்த தேசிய கல்வி நிறுவகத்தில், முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரியும் முனைவர் முருகு தயாநிதி அவர்கள், இம்முறை இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார். இந்த இரண்டு விருதுகளும், இவர் இதுவரை தமிழுக்கு ஆற்றிவரும் அயராத சேவைக்காக அண்மையில் இந்தியாவில் வைத்து வழங்கப்பட்டுள்ளதுகுறிப்பாக இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற பன்னாட்டு மாநாடுகளில் வியத்தகு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்ததோடு, ஆதாரசுருதி உரையினையும் நிகழ்த்திப் பல அமர்வுகளுக்குத் தலைமை தாங்கியும் உள்ளார்.

அத்தோடு ஆய்வு மாநாட்டுக்கான இணைப்பாளராகவும் செயற்பட்டு, தனது முயற்சியினால் தேசிய கல்வி நிறுவகத்தில் முதலாவது பன்னாட்டு மாநாட்டினையும், மட்டக்களப்பு எழுத்தாளர் சங்கத்தின் ஊடாக முதலாவது பன்னாட்டு மாநாட்டினையும் நடாத்தி வைத்துள்ளார். இவர் 30 மேற்பட்ட பல்வகைப் புத்தகங்களையும்  200 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இத்தகைய அயராத முயற்சிக்காக, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்உலகத் தமிழ்மாமனிவிருதையும், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்கம், சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு, அனைத்திந்திய எழுத்தாளர் சங்கம்; “தமிழ்ச்சுடர்விருதையும் வழங்கிக் கௌரவித்துள்ளளது.

இதற்கு முன்னர் இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2016ஆம் ஆண்டும் இரட்டை விருதினைப் பெற்றிருந்தர். கரந்தைத் தமிழ்ச் சங்கம்உரைத் தமிழ் ஒளி”, மற்றும்தமிழ் முகில்ஆகிய விருதுகளை வழங்கிக் கௌரவித்தது. 2019ஆம் ஆண்டு பல விருதுகளைப் பெற்றுக்கொண்டார். இவரது ஆய்வு முயற்சியினையும் கற்பித்தல் தன்மையினையும் உள்வாங்கி, இந்தியப் பள்ளி உளவியல் சங்கம் (Indian School Psychology Association) “Shri.P.A.Sharma Best School Psychology Trainer Award”  எனும் உயரிய விருதினை வழங்கியிருந்தது.

தொடர்ந்து சிறந்த ஆய்வுக் கட்டுரைக்காகசிலம்பொலிச் செல்லப்பா விருதும்”, 2020ஆம் ஆண்டு, பழந்தமிழில் கல்விச் சிந்தனை என்ற புத்தகத்திற்கான விருதினை கிழக்குமாகாணப் பண்பாட்டலுவல்கள் அமைச்சும், 2021ஆம் ஆண்டு ஐழுசு அச்சகம்மட்டு” (தமிழர் பண்பாட்டு ஆய்வு)  என்ற புத்தகத்திற்கான விருதினையும், இலங்கை இளைஞர் சேவைகள் மன்றம் விளையாட்டு, பண்பாடு, இளைஞர்களை ஊக்கப்படுத்தல் என்பவற்றை சிறந்த முறையில் மேற்கொண்டமைக்காக 2007 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில்சிறந்த பண்பாட்டாளர்விருதினையும் வழங்கிக் கௌரவித்தது.

2007ஆம் ஆண்டு, பட்டிருப்புக் கல்வி வலயம்படிக்கும்போதுஎனும் கவிதைப் புத்தகத்தினைச் சிறந்த முறையில் வெளியிட்டமைக்காக சிறந்த வெளியீட்டாளருக்கான விருதினை வழங்கியது. 2021ஆம் ஆண்டு, பசுமை வாசல் பவுண்டேசன், தேசிய மக்கள் உரிமைகள் இயக்கம், அக்கினி பெண்கள் தமிழ்ச் சங்கம், கம்பர் இளைஞர் நற்பணி மன்றம் என்பன இணைந்துசெம்பகராமன்விருதினை வழங்கிக் கௌரவித்தது. இந்த விருது இவருடைய கல்விப் பணிக்கும் அறப்பணிக்கும் கிடைத்தது. 2019ஆம் ஆண்டு, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்உலகத் தமிழ் இசைத் தூதுவர்விருதினை வழங்கிக் கௌரவித்தது. தமிழுக்குச் செய்து வரும் சேவைக்காக இவ்விருது வழங்கப்பட்டது. 

தான் பாடசாலையின் அதிபராக இருந்து, 2012ஆம் ஆண்டு, கல்விப் பொது தராதரப் பரீட்சையில் 100 வீதம் சித்தியடையச் செய்தமைக்காக, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு மரியாதைக்கான விருதினை (Honor Award)வழங்கி இருந்தது. திருவள்ளுவர் கல்லூரியும் பிரபா இலக்கியப் பதிப்பகமும் இணைந்து 2019ஆம் ஆண்டு, கலைச்சுடர் விருதினை வழங்கிக் கௌரவித்தது. 2020ஆம் ஆண்டு, மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலகம், அதிக புத்தகங்களை வெளியிட்டமைக்காக, Writer Honor வழங்கிக் கௌரவித்தது. இதேஆண்டு, விஷ்வ சிவானந்த அறக்கட்டளையும் தமிழ் இலக்கிய சபையும் இணைந்து, வினாக்களுக்கான விடையினைப் பொருத்தமாக அளித்தமைக்காகஅருட்ஜோதிவிருதினை வழங்கி இருந்தனர்.

2019ஆம் ஆண்டு, சென்னை பொருனை இலக்கிய வாசகர் வட்டமும், காஞ்சி கிருஷ்ணா கல்லூரியும் சன்லக்ஸ் பன்னாட்டு இதழும் இணைந்து நடத்திய, பன்னாட்டு ஆய்வரங்கில்தமிழ்ச் சுடர்விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு, பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால்மகிழை மகேசன்விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு, திருவள்ளுவர் கல்லூரி, கலைஞர் தமிழ்ப் பேராயம், உலகத் தமிழர்கள் இணையவழி மன்றம், கலைப்பூக்கள் கலைக்கழகம், பாரதியார் இலக்கியக்கழகம், பிரபா இலக்கியப் பதிப்பகம் இணைந்து நடத்திய பன்னாட்டு மாநாட்டில், இலக்கியம், கலை, பண்பாடு, கல்வி, மொழி உணர்வுக்கு மதிப்பளித்துகலைஞர் விருதுமற்றும் சமூக சமத்துவத்திற்கு மதிப்பளித்து வருகின்றமைக்காக.வெ.ரா.பெரியார்விருதும் வழங்கிக் கொரவிக்கப்பட்டது.

தொடர்ந்து அனைத்துலகப் பொங்கு தமிழ்ப் பேரவை, பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் என்பன இணைந்து, காமராசர் பிறந்த நாளை முன்னிட்டுஅறிவுக் களஞ்சியம்விருதினை வழங்கியது. இத்துடன் பாரதியாருடைய தேச விடுதலை பற்றிய உளவியல் பார்வை, இருமுகமும் இரு வரமும், தமிழர்களுடைய கல்விச் சிந்தனையில் கற்பித்தல் உத்தி, மட்டக்களப்புத் தமிழக மக்களும் பழமொழியும், மட்டக்களப்புத் தமிழகத்தில் உறவுமுறைச் சொற்கள், வாக்கியங்களை இலகுவாகக் கற்பித்தல், மட்டக்களப்பு நாட்டுப்பாடல்களில் காதல் உணர்வு, தாதன் கல்வெட்டு ஓர் ஆய்வு, துரோபதை வழிபாடு (தமிழகம் - மட்டக்களப்பு), தமிழிசையின் சரிதையில் மேலெழும் ஈசனுவக்கும் இன்மலர் மூன்று, சங்கச் செய்யுளைத் திட்டமிடல் முறையில் கற்பித்தல் ஆகிய ஆய்வுக் கட்டுரைகளுக்காக சிறப்புறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

முனைவர் முருகு தயாநிதி பல்வேறு புத்தகங்களை இதுவரை வெளியிட்டுள்ளார். அவை, (2007) “படிக்கும் போதே”, (2016) “அம்பிளாந்துறை”, (2016) “மாரியம்மன் பனுவல்”, 2018 (கண்டிராசன் ஒப்பாரி), (2018) “படுவான்கரைக்கு வந்துபார் தம்பி”, (2018) “கிராமியக் கலை”, (2018) “பழந்தமிழில் கல்விச் சிந்தனை”, (2019) “இராமர் அம்மானை”, (2019) “வள்ளியம்மன் அம்மானை”, (2019) “வள்ளியம்மன் கூத்து”, (2019) “ஊஞ்சல் விளையாட்டு”, (2019) “இயல்பு மீறிய குழந்தைகள்”, (2019) “இலகுமுறையில் தமிழ் கற்பித்தல்”, (2020) சூரசம்மாரக் கூத்து”, (2021) “கந்தபுராணம்    (e Book), (2021) “மட்டு” (தழிழர் பண்பாட்டு ஆய்வு (e Book), (2021) “தமிழர் சிந்தனை மரபில் கல்வி”, (2021) “ஒளிக்கல்லூரி”, (2021) “தமிழ்நூல்(e Book),  (2021) “மலர்நீட்டம்” ( டீழழம) (2021) “சங்ககாலப் பண்பாடு - மரபும் மாற்றமும்(e Book), (2022) “வசந்தன் கூத்து”, (2022) “பொருதுகளம்”, (2022) “தாதன் கல்வெட்டு”, (2021) “கரோனா” (2022) அமிர்தபரிபூரணி முதலிய காவியங்கள் (கிராமியத் தெய்வக் கோயில்கள் மீது பாடப்பட்டவை),  (2022) வைகுந்த அம்மானை (திருந்திய பதிப்பு),  (2022 நொண்டி கூத்து என்பனவாகும்.

இவற்றுள் மட்டக்களப்பு வரலாற்றுடன் தொடர்பு கொண்ட புத்தகங்களாக அம்பிளாந்துறை, மாரியம்மன் பனுவல், வள்ளியம்மன் அம்மானை, வள்ளியம்மன் கூத்து, ஊஞ்சல் விளையாட்டு, மட்டு” (தழிழர் பண்பாட்டு ஆய்வு) தமிழர் சிந்தனை மரபில் கல்வி, வசந்தன் கூத்து  (திருந்திய பதிப்பு), பொருதுகளம், தாதன் கல்வெட்டு, சூரசம்மாரக் கூத்து, அமிர்தபரிபூரணி முதலிய காவியங்கள், வைகுந்த அம்மானை (திருந்திய பதிப்பு) (2022) நொண்டி கூத்து ஆகிய நூல்கள் அமையப்பெறுகின்றன. மேலும், வெளியிடப்பட இருக்கின்ற நூல்களாக பிரதான் கல்வெட்டுகள் மூன்று, அம்மனை (ஐந்து அம்மானைகள் ஒரே பார்வையில்), மயிலி இராவணன் சண்டைகூத்துப் போன்றன.

இவருடைய நோக்கம் மட்டக்களப்பில் இதுவரை அச்சுவாகனம் ஏறாத பொக்குஷங்களை அச்சுவாகனம் ஏற்றுவதும், பதிப்பித்தவற்றில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவிர்த்தி செய்து பதிப்பித்துக் கையளிப்பதுமாகவே அமையப்பெறுகின்றன. மேலும், மட்டக்களப்பில் இதுவரை வெளிவந்த புத்தகங்களில் ஆங்காங்கு பிரதானமான விடயங்கள் தெளிவின்றியே காணப்படுகின்றன. அவற்றினை யாரும் இன்றுவரையும் விளக்க முற்படவில்லை.

அத்தகைய நெருடல்களுக்கான தெளிவினை ஏற்படுத்தும் தன்மையில் இவருடைய ஆய்வுப் பணி அமைந்து கிடக்கின்றன.  உண்மையிலே இவருடைய பல்வேறு ஆய்வுகளும் ஆய்வு நூல்களும் பல்வேறு துறைசார்ந்தவை. அவை, இதுவரை தொட்டுநிற்காத பல விடயங்களை ஊடறுத்து நிற்கின்றன. இத்தகைய முயற்சியாளருக்கு இத்தகைய விருதுகள் அணிகளாக அமைவது சிறப்பைத் தருகின்றன. உயர்கல்வி நிறுவனங்கள், குறிப்பாகப் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய வேலைப்பாடுகளை தனித்துநின்று செய்து வருவது எமது மண்ணுக்கும் பெருமை சேர்க்கின்றன.SHARE

Author: verified_user

0 Comments: