வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டூர் முருகன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்.
“சின்னக் கதிர்காமம்” என அழைக்கப்படும் வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் சிறப்பம்சமான தீர்த்தோற்சவம் சனிக்கிழமை(10) காலை இடம்பெற்றது.
வெள்ளிக்கிழமை இரவு (10) இறுதிநாள் திருவிழா இடம்பெற்று, சுவாமி உள்வீதி, வெளி வீதி உலா வந்தது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இத்திருவிழாவில் பக்தர்கள், முட்காவடி மற்றும் பறவைக் காவடி எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறை வேற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment