14 Sept 2022

ஒரே நாளில் இரு ஆசியக்கிண்ணங்களை வென்ற வரலாற்று நாயகர்களுக்கு அகமகிழ்ந்த வாழ்த்துக்கள் : முன்னாள் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸ் எம்.பி

SHARE

ஒரே நாளில் இரு ஆசியக்கிண்ணங்களை வென்ற வரலாற்று நாயகர்களுக்கு அகமகிழ்ந்த வாழ்த்துக்கள் : முன்னாள் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸ் எம்.பி.

கடின உழைப்பு, விடாமுயற்சி, கூட்டு பொறுப்புடன் களமிறங்கினால் எவ்வகையான சவால்களையும் சந்திக்க முடியும் என்பதையும் அதனில் வெற்றிபெறுவது திண்ணம் என்பதையும் நிரூபித்திருக்கும் இலங்கை கிரிக்கட் அணிக்கும், இலங்கை கூடைப்பந்து மகளிர் அணிக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என முன்னாள் விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும், பல்வேறு விமர்சனங்களையும், ஏளனங்களையும் படிக்கற்களாக அமைத்து அதன் மேலேறி பயணித்து வெற்றிக் கோப்பையை தன்வசப்படுத்தியிருக்கும் இரு தேசிய அணிகளும் உச்சகட்ட செல்வாக்கு மிக்க அணிகளை வீழ்த்தி தனது வெற்றியை பதித்துள்ளமை இங்கு வெகுவாக பாராட்டப்பட வேண்டியது. இரு அணிகளும் ஆறாவது தடவையாக ஆசியாவின் சம்பியன்கள் நாங்கள் தான் என உரத்து கூறியிருக்கிறார்கள். இளம் வீரர்கள் தங்களின் நாட்டுக்காக கடினமாக உழைத்து இரண்டு ஆசிய கோப்பைகளை ஒரே நாளில் வென்று இலங்கையர்கள் எல்லோரையும் கௌரவப்படுத்தியுள்ள இந்த நாள் இலங்கையின் வரலாற்றில் பொக்கிஷமான நாளாக அமைந்துள்ளது.

இந்த வெற்றிக்காக உழைத்த வீரர்கள், பயிற்சியாளர்கள், அணிகளின் முகாமைத்துவ குழுவினர், விளையாட்டு  அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகள், ரசிகர்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் மீண்டும் அகமகிழ்வுடன் பதிவு செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: