வைத்திய அதிகாரி ஜலீலா எழுதிய “சிறகு முளைத்த மீன்;” கவிதை நூல் வெளியீட்டு விழா.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாகப் பணியாற்றும் ஹயாத்துமுஹம்மது ஜலீலா முஸம்மில் எழுதிய “சிறகு முளைத்த மீன்” கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை 01.10.2022 ஏறாவூர் வாவிக்கரை கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவி ஆசிரியை என்.எம். ஆரிபா தெரிவித்தார்.
வைத்தியர் ஜலீலா எழுதிய இந்த கவிதை நூல் தொகுப்பில்; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, தாயிற் சிறந்த கேடயமில்லை, சேற்றில் நின்று சோற்றைத் தருகிறார் உள்ளிட்ட சுமார் 85 தலைப்புக்களில் கவிதைகள் புனையப்பட்டுள்ளன.
“சிறகு முளைத்த மீன்” கவிதை நூல் வெளியீட்டு விழாவில் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இக்கவிதை நூலின் நூல் நயந்துரையை பல்துறைக் கலைஞரும் ஹாஷ்ய நாடக எழுத்தாளரும் நகைச்சுவை நடிகருமான கவிக்கோ ஏறாவூர் ஏ.சி. அப்துல் றஹ{மான் நிகழ்த்தவுள்ளார். அதிதிகள் உரை, ரசனைக் குறிப்பு என்பனவும் நிகழ்வில் இடம்பெறவுள்ளன.
கவிதை நூலாசிரியர் வைத்தியர் ஜலீலா அலிகார் தேசியக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மறைந்த யூ. ஹயாத்து முஹம்மதுவின் மகளாவார். இவரது கவிதைகள், ஆக்கங்கள் இலங்கையின் தேசியப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
0 Comments:
Post a Comment