உயர்தர முதலுதவிப் பயிற்நெறி ஆரம்பம்.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் அடிப்படை முதலுதவிப் பரீட்சையில் சித்தி பெற்ற தொண்டர்களுக்கு உயர்தர முதலுதவிப் பயிற்சி நெறி வியாழக்கிழமை(08) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மட்.கிராங்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக்கிளையின் தலைவர் த.வசந்தராசா, செயலாளர் சா.மதிசுதன், பொருளாளர் வ.சக்திவேல், சங்கத்தின் சுகாதாரக்குழுத் தலைவர் ந.தயாகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறவுள்ள இப்பயிற்றி நெறியைப் பூர்த்தி செய்த தொண்டர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நடைபெயவுள்ள உயர்தர முதலுதவிப் பரீட்சையில் தோற்றவுள்ளர். அப்பரீட்சையில் சித்திபெறும் தொண்டர்கள் பயிலுனர் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இப்பயிற்சி நெறியை முதலுதவிப் போதனாசிரியர்களான ஆ.சோமசுந்தரம், ச.கணேசலிங்கம் ஆகியோர் பயிற்றுவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment