3 Jun 2022

மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் ஆறு கோடி ரூபா பெறுமதியான ஆரோக்கிய சுகவாழ்வு மையம் திந்து வைப்பு.

SHARE

மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் ஆறு கோடி ரூபா பெறுமதியான ஆரோக்கிய சுகவாழ்வு மையம் திந்து வைப்பு.

கடந்தகால யுத்தத்தினால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட படுவாங்கரைப்பிரதேசத்தில் பட்டிப்பளையும் முக்கியமானது.

அந்த அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார தேவையை ஏனைய மக்களுக்கு கிடைக்கும் சேவைக்கு சமன்செய்யும் முகமாக உலகவங்கியின் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட மகிழடித்தீவு வைத்தியசாலையில் நவீன ஆய்வுகூட, மருந்தகத்தைக் கொண்ட மூன்று மாடிக்கட்டிடம் நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலாளர்  க. கருணாகரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் மக்களின் பாவனைக்கு வழங்கிவைக்கப்பட்டது.

கொக்கட்டிச்சோலையில் வாழ்கின்ற மக்களுக்கு ஒரு ஆதார வைத்தியசாலையில் கிடைக்கக்கூடிய தரத்தில் சேவைகள் கிடைக்கக்கூடிய விதத்தில் வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இது பட்டிப்பளை மக்களின் வரப்பிரசாதமாக பலரின் உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதாக நிகழ்விற்கு தலைமை தாங்கிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.










 

SHARE

Author: verified_user

0 Comments: