மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் 2022 ஆண்டுக்கான கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.
மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் இவ்ஆண்டுக்கான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி மாவட்டச் செயலாளர் ஆ.நவேஸ்வரன் முன்னிலையில் செவ்வாய்கிழமை(31) நடைபெற்றது.
இக் கூட்டத்தின்போது இவ் ஆண்டில் முன்னெடுக்கப்படவேண்டிய திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் வெளிவந்துள்ள படைப்புகளின் வெளியீட்டு விழாக்களை நடாத்துதல், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மாபெரும் உணவுக்கான நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக துறை சார்ந்த விற்பன்னர்களை அணுகி ஆய்வு ரீதியான பிரசுரங்கள் மூலம் மக்கள் மத்தியில் வீட்டுத்தோட்டம், சிறு பயிர்ச்செய்கை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல், பிரதேச ரீதியாக இளம் படைப்பாளிகளை இணங்கண்டு கெளரவிப்பதன் மூலமாக அவர்களின் கலை இலக்கிய ஆளுகையை வளர்த்தல் போன்ற மேற்குறித்த செயற்திட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கலாநிதி.முருகு.தயாநிதி, செயலாளர் வி.மைக்கல் கொலின், பொருளாளர் கதிரவன் த.இன்பராசா, கலாசார உத்தியோகஸ்த்தர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்ததுடன், ஆக்கபூர்வமான கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
0 Comments:
Post a Comment