கண்ணகை புகழ் பாடுவோம் எனும் பக்தி பாடல் அடங்கிய இறுவட்டும் வெளியீடு.
மட்டக்களப்பில் புகழ்பெற்ற தாண்டவன்வெளி குளக்கட்டு கண்ணகியம்மன் ஆலய அலங்கார திருச்சடங்கு உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி திருக்குளிர்த்தி பாடி அம்மன் உட்சவம் நிறைவுபெறவுள்ளது.
பூம்புகார், ஏரன்ஸ் வீதி, வாழ் மக்களால் இரண்டாம் நாள் சடங்கு உற்சவததினை சிறப்பிக்கும் முகமாக சனிக்கிழமை(04) இரவு பூசைகள் இடம்பெற்றது. இதன்போது, குழந்தையடி பிள்ளையார் ஆலய கட்டட நிதிக்காக மங்கையக்கரசி குடும்பத்தினரின் அனுசரணையில் கண்ணகை புகழ் பாடுவோம் எனும் பக்தி பாடல் அடங்கிய இறுவட்டும் வெளியீடு செய்யப்பட்டது.
இவ் இறுவட்டும் வெளியீடு விழாவில் ஆலய
பிரதம குரு சிதம்பரசாந்தரூபக் குருக்கள், ஆலய பிரதம பூசகர் சித்திரவேல் ஐயா மற்றும்
ஆலய திருவாகத்தினர், மங்கையக்கரசி அம்மை யாரின் குடும்ப சந்ததியினர் உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டனர். கண்ணகை அம்பாளின் தீ மிதிப்பு உற்சவம் எதிர்வரும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
தாண்டவன்வெளி வாழ் மக்களின் பத்தாம் நாள் சடங்கு உற்சவ தினத்தன்று இடம்பெறும் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment