6 May 2022

65 பேர் மட்டுமே மக்களுக்காக நாடாளுமன்றில் உள்ளோம் – 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர்: சாணக்கியன்.

SHARE

65 பேர் மட்டுமே மக்களுக்காக நாடாளுமன்றில் உள்ளோம் – 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர்: சாணக்கியன்.

நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் வியாழக்கிழமை (05) உரையாற்றிய அவர், நாடாளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

ஏனென்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை தெரிவு செய்வார்களென தான் நினைக்கவில்லை என அவர் கூறினார்.

ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிற்கு வாக்களித்து, அவரை பிரதி சபாநாயகராக தெரிவு செய்த 148 பேரும் தற்போகும் ராஜபக்ஷக்களுடனேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, அவரை எதிர்த்து போட்டியிட்ட இம்தியாஸ் பாக்கிர் மார்க்கருக்கு வாக்களித்த 65 பேர் மட்டுமே மக்கள் பக்கம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



 

SHARE

Author: verified_user

0 Comments: