கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் புத்தாண்டு விசேட பூஜைகள்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் இன்றுகாலை விசேட பூஜைகள் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் சனிக்கிழமை(01.01.2022) விசேட புத்தாண்டு பூஜைகள் இடம்பெற்று வருகின்ற போது கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம்
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.
ஆலயத்தின் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நிஜோத் குருக்களின் தலைமையில் மூல மூர்த்தியாகிய அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்று பின்னர் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றன. தொடர்ந்து அரோகரா கோஷங்களுடன் எழுந்தருளி அம்மாள் ஆலயத்தின் உள்வீதி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்றது.
2022 வருட புத்தாண்டு பிறப்பு பூஜையில் நாடெங்கிலும் இருந்து நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்
இதன்போது ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment