தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் மட்டு.மாவட்டத்தில்
தபால் சேவைகள் ஸ்தம்பிதம்.
செவ்வாய்கிழமை (14) தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு பிரதம தபால் நிலைல்லம் உட்பட மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள தபால் அலுவலகங்கள் உப தபால் அலுவலகங்கள் செயலிழந்து காணப்பட்டன.
தபால் வினியோகம் உட்பட அனைத்து நடவடிக்கைககளும் ஸ்தம்பித்திருந்தன.தபார் சேவைகளைப்பெற தபால் நிலையங்களுக்கு வந்தோர் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
0 Comments:
Post a Comment