9 Dec 2021

மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் செயற்றிட்டம்.(vedio)

SHARE

மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் செயற்றிட்டம்.

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின்  மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் செயற்றிட்டத்தின் ஒன்றாக சித்தாண்டி வந்தாறுமூலை பிரதேசங்களை கருத்தில் கொண்டு மட்.ககு.வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயம், மட்.ககு.வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளிலும் .பொ. உயர்தரத்தில் கணித விஞ்ஞான பிரிவுகளில் 2022இல் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களிற்கு இலவசமாக விசேட மேலதிக வகுப்புக்கள் நடத்தும் செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு வியாழக்கிழமை(09) மட்.ககு.வந்தாறுமூலை  மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி தக்ஷஜானந்தர் மகராஜ் அவர்களும், கல்குடா வலயத்தின் திட்டமிடல் பிரிவு பிரதி வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.துஸ்யந்தன் அவர்களும், இந்செயற்பாட்டினை ஒருங்கிணைப்பு செய்த விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்று பணிப்பாளர் .பிரதீஸ்வரன் அவர்களும், இரண்டு பாடசாலையின் அதிபர்களான எஸ்.மோகன் மற்றும் ரி.முரளிதரன் ஆகியோரும் இச்செயற்பாட்டினை முன்னெடுக்கவிருக்கும் வளவாளர்களும், பயனாளிகளான மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு மனிதநேய நம்பிக்கை நிதியம் இலங்கை பூரகவும் செயற்றிட்டங்களை நடாத்தி வருகின்றது. அதில் ஒரு செயற்பாடாகவே கல்குடா வலயத்தில் கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்கள் உயர்தரத்தில் சித்தியடையும் வீதத்தினை அதிகரிக்கும் நோக்குடனே இலண்டன் மனிதநேய நம்பிக்கை நிதியம் இதற்கான நிதியினை வழங்க முன்வந்துள்ளது என்றும், வலயக் கல்வி அலுவலகமும், பாடசாலை நிருவாகமும் பூரண ஒத்துழைப்பினை வழங்கியதன் அடிப்படையிலே இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தக்கூடிய சாத்தியம் ஏற்பட்டதாகவும் இத்திட்டத்தை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்தும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் பணிப்பாளர் .பிரதீஸ்வரன் தெரிவித்தார்.












SHARE

Author: verified_user

0 Comments: