28 Nov 2021

தவிசாளர் விளையாட்டு மைதானக் காணியைச் சுற்றி வேலியிட்டு அடைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

SHARE

தவிசாளர் விளையாட்டு மைதானக் காணியைச் சுற்றி வேலியிட்டு அடைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப் பற்று (அரையம்பதி) பிரதேச சபைத் தவிசாளர் தருமரெத்தினம் தயானந்தன் என்பவர் கிரான்குளம் கடற்கரை வீதியில், அமைந்துள்ள கிரான்குளம் கதிரவன் விளையாட்டுக் கழகத்திற்குச் சொந்தமான பொது விளையாட்டு மைதானக் காணியைச் சுற்றி வேலியிட்டு அடைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த விளையாட்டுக்கழக இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை(28) மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிரான்குளத்தில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கத்தான்குடி பொலசார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த முயன்றுள்ளனர். எனினும் தமது பிரச்சனைக்குத் தீர்வு வரும் வரையில் தாம் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளக் போவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதிகாரிகள் நீதிக்கு மதிப்பளி உனது அதிகாரம் மக்களுக்கு அடாவடி அல்ல, உன்காணி என்றால் ஏன் இரவில் வேலி போடுகின்றாய், அதிகாரத்தைக் காட்டாதே, எமது மைதானத்தில் அடாவடி காட்டாதே, உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருதனர்.

இந்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மவாட்ட அமைப்பாளரும், மண்முனைப் பற்று (ஆரையம்பதி) பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத்தவலைவருமான பரமசிவம் சந்திரகுமார் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்து இளஞர்களின் கோரிக்கை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். இவ்விடையம் தொடர்பில் தான் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும், இதற்காக எதிர்வரும் இரண்டு வராத்திற்குள் உரிய பிரதேச சபைத் தவிசாளரின் கையகப்படுத்தலிலிருந்து உரிய விளையாட்டு மைதானத்தை மீட்டு மீண்டும் கிரான்குளம் கதிரவன் விளையாட்டுக் கழக்திடம் ஒப்படைப்பேன் என உறுதி மொழி வழங்கியதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

சந்திரகுமார் அவர்களின் கருத்துக்கு செவிசாய்த்து ஆர்ப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் தருவாயில் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி மற்றும் கிராம சேவை உத்தியோகஸ்த்தரும் அவ்விடத்திற்கு வருகை தந்திருந்தனர். இளைஞர்களுக்கு தான் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் சந்தரகுமார் அவர்கள்  பிரதேச செயலாளரிடம் தெரிவித்ததையடுத்து பிரதேச செயலாளரும் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார்.   

தமது பொது மைதானத்தை இவ்வாறு பிரதேச சபைத் தவிசாளர் எல்லையிட்டு அடைப்பதாகத் தெரிவித்து கடந்த 22.11.2021 அன்று குறித்த மைதானக் காணியில் வைத்து விளையாட்டுக் கழகத்தினருக்கும், குறித்த தவிசாளருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டிருந்தவேளை அங்கு வருதை தந்திருந்த

மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க பிறேமதிலக்க, காத்தான்குடி பொலிநிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி, ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் மன்முனைப் பற்று பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான பரமசிவம் சந்திரகுமார், அகியோர் இருசாரருடனும் கலந்துரையாடியிருந்தனர்.

தவிசாளரால் அடைக்கப்பட்ட நிலப்பரப்பின் ஒருபகுதி அரச காணி எனவும், ஏனையவை தனியார் காணி எனவும், அரச காணியை எல்லையிட்டு அடைக்கப்பட்டிருப்பதை உடன் அகற்ற வேண்டும் எனவும். இல்லையேல் அது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்படும் என பிரதேச செயலாளர் திருமதி சத்தியானத்தி நமசிவாயம் அப்போது தெரிவித்திருந்தார்.

இளைஞர்கள் அவ்விடத்தில் தொடர்ந்து விடையாடுமாறும் இது தொடர்பில் விiளாயட வேண்டாம் என நீதி மன்ற கட்டளை வந்தால் விளையாட முடியாது என அதிகாரிகள் இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர்.

இதுஇவ்வாறு இருக்க அதிகாரிகளின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் கடந்த வெள்ளிக்கிழமை(26.11.2021) இரவு குறித்த மைதானக் காணியை மீண்டும் முட்கம்பி வேலியிட்டு தவிசாளரினால், அடைத்து இளைஞர்களை விளையாடாமல் தடை ஏற்படுத்தியமையைக் கண்டித்தே தாம் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், இன்னும் இரு வாரத்திற்குள் எமது மைதானத்தை எம்மிடம் நிரந்தரமாக ஒப்படைக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் எனவும்  கிரான்குளம் கதிரவன் விளையாட்டுக் கழகத்தினர் இதன்போது தெரிவித்தனர்.

தருமரெத்தினம் தயானந்தன் அவர்கள் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தர்தலில் கிராங்குளம் 9ஆம்  வட்டாரத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மண்முனைப் பற்று பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில்  முண்முனைப் பற்றுப்பிதேச சபைக்கு அப்போது சுயேட்சைக் குழு உறுப்பினர் ஒருவர் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த வருடம் அந்த சபையில் முன் வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் இரண்டு தவைகள் தோல்வியடைந்ததையடுத்து புதிய தவிசாளராகத் இந்த வருட முற்பகுதியில் தெரிவு செய்யப்பட்டவரே  தருமரெத்தினம் தயானந்தன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: