கட்டுமுறிவு பிரதான வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்.
மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தின் கட்டுமுறிவு கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் அப்பகுதி மக்கள் செவ்வாய்கிழமை(09) ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்டிருந்தனர்.
கட்டுமுறிவு பிரான வீதியில் வருடாந்தம் மாரி மழை காலத்தில் முற்றாக நீரினால் மூடப்படுவது வழக்கம். இந்நிலையில் கிராமிய பாலங்கள் அமைக்கும் அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் கீழ் அக்குறித்த வீதியிலும் பாலம் ஒன்று அமைக்கப்படுவதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த போதிலும் அது இற்றைவரை ஆரம்பிக்கப்படாததால் அவ்வீதியைப் பயன்படுத்தும் கட்டுமுறிவு, ஆண்டான்குளம், உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதும் மக்கள், மற்றும் ஆசிரியர்கள், விவசாயிகள் மாணவர்கள், உள்ளிட்ட பலரும் பலத்த அசௌகரியங்களை எதிர் கொண்டு வருவதாகத் தெரிவித்து உடன் உரிய பாலத்தை அமைத்துத் தரும்படி தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அரசாங்கத்தினால் கிராமிய பாலங்கள் அமைக்கும் செயற்பாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உரிய பாலைத்தை அமைப்பதற்குரிய பொருட்கள் அவ்விடத்திலே சேமிக்கப்பட்டுள்ள போதிலும் ஏன் இற்றைவரையில் உரிய பாலத்தில் நிருமாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
0 Comments:
Post a Comment