கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைக்கூட்டம் வாழைத் தோட்டம் துவசம்சம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள திக்கோடை, தம்பங்கேணி, களுமுந்தன்வெளி, தும்பங்கேணி, நவகிரி நகர், கண்ணபுரம், காலையடிவட்டை, உள்ளிட்ட பல எல்லைப் புறக்கிராமங்களில் தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசங்களும், தொல்லைகளும் அதிகரித்த வண்ணமுள்ளன. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டு வருவதோடு, பயன்தரும் பயிரினங்களையும், வீடுகளையும், அழித்து வருவதாக அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
எல்லைப் புறங்களை மையமாக வைத்து யானைப்பாதுகாப்பு வேலி அமைத்துத் தரவேண்டும் என்பதுவே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகவுள்ளது.
0 Comments:
Post a Comment