வாய்க்காலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்மீட்பு.
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரி நகர் 38 ஆம் கிராமத்தின் வயற் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை(03) இரவு மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அக்கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய 7 பிள்ளைகளின் தந்தையான அமரசிங்கம் சந்தரலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்விடையம் குறித்து மேலும் தெரியவருவதாவது….
வெள்ளிக்கிழமை(01) வயலுக்குச் செல்வதாக தெரிவித்து விட்டு சென்ற குறித் நபர் சனிக்கிழமை வரை வீடு திரும்பாதவிடத்து உவினர்கள் தேடியுள்ளனர். இனந்நிலையில் சனிக்கிழமை மாலை அப்பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் வயற் பகுதியில் அமைந்துள்ள வாய்க்காலில் ஒரு உடல் கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லாவெளி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்ததோடு, உறவினர்கள் உடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர். இந்நிலையில் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமை வெல்லாவெளி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தி, பிரேத பரிசோதனைக்குட்படுத்தும்படி பொலிசாருக்கு உத்தரவிட்டார். சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment