மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் முன்னால் திங்கட்கிழமை(20) அதிகாலை 5.00 மணியளவில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று சம்பவித்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது…
திருகோணமலை கிண்ணியா பகுதியிலிருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு கல்முனை பகுதி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வட்ட ரக வாகனவே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணித்த எவருக்கும் எதுவித சேதமும் ஏற்படாமல் தெய்வாதீனமாக உயிர் உயிழைத்துள்ளதாகவும், நான் ஒன்று குறுக்கீடு செய்ததில் இவ்விபத்து ஏற்பட்டதாகவும், அதில் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் வாகனம் பெரிதும் உடைந்து பழுதடைந்துள்ளதுடன், அதில் ஏற்றிக்கொண்டு சென்ற பெருமளவான மீன்ளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் உடன் இஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment