மட்டு.ஏறாவூரில் 7500மில்லி லீற்றர் கசிப்பு விற்பனையாளர் ஒருவர் கைது.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னனக்குடாவில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்திகாரி ஐ.பி.பண்டார தெரிவித்தார்.
திங்கட்கிழமை மாலை கிடைக்கப்பெற்ற தகவலொன்றின்
பேரில் குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் 7500 மில்லி லீற்றர் கசிப்புடன்
இவர் கைது செயயப்பட்டுள்ளார்
கைதான நபர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment