ஐஸ் போதைப் பொருள் கடத்திய இருவர் மட்டுநகரில், கைது—5050
மில்லிகிறாம் ஐஸ் பணம் கையைடக்க தொலைபேசிகள் முச்சக்கர வண்டி மீட்பு.
ஐஸ் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர்
வெள்ளிக்கிழமை (30) மாலை கைது செய்துள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார
தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் வைத்து முச்சக்கர வண்டியை
சோதனையிட்டபோது அதிலிருந்து 5050 மில்லிகிறாம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் தொடர்புடைய மற்றொருவர் மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது
செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 9100 ரூபாய் பணம் 4 கையடக்க தொலைபேசிகள் ஒரு முச்சக்கர
வண்டி என்பனவும் கைப்பற்ப்பட்டுள்ள. மோப்ப நாயின் உதவியுடனேயே மேற்படி முச்சக்கர வண்டி
சுற்றி வளைக்கப்படமை குறிப்பிடத்தக்கது.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதமன்றத்தில்
ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.
0 Comments:
Post a Comment