வெல்லாவெளியில் சிறுபோக வேளாண்மை விதைப்பு வேலைகள் ஆரம்பம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சிறுபோக வேளாண்மைச் செய்கை நடடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் படுவாங்கரைப் பெருநிலப்பரபின் வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குபட்பட்ட வயற்கண்டத்தில் தற்போது சிறுபோக வேளாண்மைச் செய்கையின் விதைப்பு வேலைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
சிறுபோக வேளாண்மைச் செய்கையானது, குளத்து நீரை நம்பி செய்யப்படுவதாகும். கடந்த மழை வீழ்ச்சிக் காலத்தில் நவகிரிக் குளத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் இவ்வாறு செய்கை பண்ணப்படும் வேளாண்மைச் செய்கைக்குப் தற்போது பயன்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இம்முறை 10250 ஏக்கர் சிறுபோக வேளாண்மைச் செய்கை பண்ணப்படுவதாகவும், அவற்றுள் தற்போது விதைப்பு வேலைகள் இடம்பெற்று வருவதாகவும் எதிர்வரும் 19 ஆம் திகதியிலிருந்து உரமானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்தாக வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் எம்.ஐ.எம்.பாயிஸ் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment