6 Apr 2021

டெங்கு நோயைத் தடுப்பதற்காக பொதுமக்களை விழிப்பூட்டும் சிரமதானப்பணி.

SHARE

டெங்கு நோயைத் தடுப்பதற்காக பொதுமக்களை விழிப்பூட்டும் சிரமதானப்பணி.

டெங்கு நுளப்பின் பெருக்கம் பரவலாக அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் முகமாக மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குபட்பட்ட பகுதிகள் எங்கும் டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஏற்பட்டில் செவ்வாய்கிழமை(06) மாபெரும் வீதியோர தூய்மையாக்கல் செயற்றிட்டத்தின் கீழ் டெங்கு நோயைத் தடுப்பதற்காக பொதுமக்களை விழிப்பூட்டும் சிரமதானப்பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்து.

அந்த வகையில் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின்  குருக்கள்மடம் ஐய்யனார் ஆலயத்திலிருந்து செட்டிபாளையம் வரையிலான வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுகாக அமைந்திருந்த கழிவுகள், பொருட்கள், அனைத்தும் சிரமதானத்தின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன், அதன் செயலாளர் .லக்ஸ்மிகாந்தன், மற்றும் பிரதேச சபை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக, உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டு விழிப்புணர்விலும், சிரமதானத்திலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




































SHARE

Author: verified_user

0 Comments: