20 Feb 2021

மட்டக்களப்பு மாவட்ட கரடியனாறு பொலிஸ் பிரிவு, சின்ன புல்லுமலையில் சம்பவம்.

SHARE

மட்டக்களப்பு மாவட்ட கரடியனாறு பொலிஸ் பிரிவு, சின்ன புல்லுமலையில் சம்பவம்.

15-01-2020 அன்று திருமணமான இளம் தம்பதிகளுக்கு, 24-12-2020, அன்று தலைப்பிரசவத்தில்சுகப்பிரசவமாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறக்கும் போது 02 கிலோ 100 கிராம் நிறையுடன் காணப்பட்ட இக் குழந்தையை இரு நாட்கள் கழித்தே வீட்டுக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.

எதுவித நோய்களுமின்றி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைக்கு தாய்ப்பாலையை உணவாக கொடுத்தும் வந்துள்ளனர்.

வியாழக்கிழமை இரவு (18) பத்து மணியளவில் தாய்ப்பால் அருந்திவிட்டு தூங்கிய குழந்தையை, நள்ளிரவு 12.00 மணிக்கு தாய் எழுந்து பார்த்தபோதும் தூக்கத்திலேயே இருந்ததால் தாயும் தூங்கிவிட்டார்.

பின்னர்  வெள்ளிக்கிழமை (19) அதிகாலை 04.00 மணியளவில் மீண்டும் தாய் எழுந்து தாய்ப்பால் கொடுக்க ஆயத்தமானபோது,

குழந்தையானது மயக்க நிலையிலிருப்பதையும், மூக்கு, வாய் ஆகியவற்றால் இரத்தம் வெளியாகியிருப்பதையும் அவதானித்து கணவரையும், குழந்தையின் அம்மம்மாவையும் எழுப்பி விடயத்தை தெரிவித்து செங்கலடி வைத்தியசாலைக்கு  குழந்தையை கொண்டு சென்றபோது,

குழந்தை ஏற்கனவே மரணமாகிவிட்டதுஎன அங்கிருந்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.

கரடியனாறு பொலிசாருக்கு விடயம்  தெரிவிக்கப்பட்டு,  நீதிபதியின் அனுமதியுடன் பிரதேச மரண விசாரணை அதிகாரி மரண விசாரணையை முன்நெடுத்திருந்தார்.

தாய்ப்பால் புரைக்கேறியதால்தான் குழந்தை மரணித்திருக்கிறது என பெற்றோர் தெரிவித்தபோதும்,

குழந்தையின் பிரேதத்தை பார்வையிட்ட மரண விசாரணை அதிகாரி, குழந்தையின் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தக்கறையிருப்பதை அவதானித்ததோடு,

வலது உள்ளங்கையில் பாம்பு தீண்டிய அடையாளத்தோடு, வலது கை உட்பட கழுத்து மற்றும் தலையின் பின் பகுதியெங்கும் நிறமாற்றத்துக்குள்ளாகியிருப்பதையும் அவதானித்து, பாம்பு தீண்டியதால் ஏற்பட்ட மரணமாக இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: