23 Nov 2020

மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கும், மாவட்ட ஊடகவியாளர்களுக்கான முகக்கவசம் மற்றும் கிருமி தொற்று நீக்கி வழங்கி வைப்பு.

SHARE

கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கும், மாவட்ட ஊடகவியாளர்களுக்கான முகக்கவசம் மற்றும் கிருமி தொற்று நீக்கி வழங்கி வைப்பு.

நாட்டில் ஏற்படும் அனர்த்த காலங்களின் போது ஹியுமெடிக்கா எனும் அரச சார்பற்ற நிறுவனம் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றது.

அந்த வகையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் தொற்றின் காலப்பகுதியில் நேரடியாக களத்தில் இருந்து செய்திகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஊடகவியலாளர்கள், மற்றும் கொவிட் - 19 பாதுகாப்பு மாவட்ட செயலணியுடன் இணைந்து செயற்பட்டு வரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகஸ்த்தர்கள், பிரதேச மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகளுக்கான கொவிட் - 19 வைரஸ் பாதுகாப்பு அங்கிகள், முகக்கவசம் மற்றும் கிருமி தொற்றுநீக்கி திரவம் என்பன ஹியுமெடிக்கா நிறுவனத்த்தினர், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து திங்கட்கிழமை (23) அரசாங்க அதிபர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹியுமெடிக்கா நிறுவன முகாமையாளர் வைத்தியர் பிரதிவிராஜ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி சிறீகாந்த், மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாவட்ட செயலக தகவல் திணைக்கள அதிகாரி வடிவேல் ஜீவானந்தம் மற்றும் மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.




















SHARE

Author: verified_user

0 Comments: