1 Oct 2020

கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் சர்வதேச முதியோர் தின நிகழ்வில் அசத்திய முதியோர்கள்.

SHARE

கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் சர்வதேச முதியோர் தின நிகழ்வில் அசத்திய முதியோர்கள். சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்து  நடாத்தப்பட்ட  சர்வதேச முதியோர் தின நிகழ்வானது  கிழக்கு மாகாணப் சமூக சேவை திணைக்களத்தின்  பணிப்பாளர் என்.மதிவண்ணன்  தலைமையில் இன்று (01) ஆந் திகதி வியாழக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

"நோய்த்தொற்றுப்  பேரிடர் இடையே முதியோர்களின் சவால்கள்" எனும் இவ்வாண்டிற்கான தொனிப்பொருளில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இவ் விழாவிற்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சதர்சினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்ததுடன்,  ஓட்டமாவடியைச் சேர்ந்த சிரேஷ்ட பிரஜையான அல்லாஹ்.மீராசாகிபு ஈசாலெப்பை அவர்களின் கம்பு சுழற்றிய  வரவேற்புடன் நிகழ்வு  ஆரம்பமானது.

இந்நிகழ்வின் போது மாகாண றீதியில்  சிறந்த முறையில் செயட்பட்ட முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகளிற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்படடன. அத்தோடு 90 வயதிற்கு மேற்பட்ட  சிரேஷ்ட பிரஜைகள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன்,  மாணவர்களின் அழகிய வரவேற்பு நடனமும்,  முதியோர்களின் கலையம்சம் நிறைந்த கலை நிகழ்வுகள் மேடையினை அலங்கரித்திருந்ததுடன்,  அனைவரது கண்களுக்கும் விருந்தாக அமைந்திருந்தது.

மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் ஜீ.அருணன்,  கிழக்கு  கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சீ.சசீதரன்,  மாகாண சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். அருண்மொழி, 

மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும்  பிரதேச செயலக சமூக சேவை உத்தியாகத்தர்களும்  கலந்து சிறப்பித்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: