சின்ன ஊறணி பொது மயாணத்தின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வானது மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் தலைமையில் இன்று (12) இடம்பெற்றது.4ஆம் வட்டாரத்திற்குட்பட்ட சின்ன ஊறணி பொதுமாயணத்தின் சுற்றுமதிலினை அமைக்க வேண்டும் என அவ்வட்டார உறுப்பினரும் பிரதி முதல்வருமான க.சத்தியசீலன் மற்றும் பிரதேச மட்ட அமைப்புகள் ஆகியோர் முன்வைத்த வேண்டுகோளிற்கிணங்க மட்டக்களப்பு மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் ஊடாக குறித்த மாயணத்தின் சுற்றுமதில் அமைப்பதற்கான வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மேற்படி வேலைகளை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர ஆணையாளர் கா. சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
0 Comments:
Post a Comment