(ராஜ்)
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயகத்தில் இயங்கி வரும் WADTCO மாற்றுத் திறளாளிகள் அமைப்பினர் தமக்கான உரிமைகளை பெற்றுத் தருமாறு அதிமேதகு ஜனாதிபதிக்கு கோரிக்கை ஒன்றை முன் வைத்தனர்.அது தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய பெனர் ஒன்றினை திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயகத்தின் முன்னால் இன்று (09) காலை காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்த பெனரில் பின்வரும் விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதிமேதகு ஜனாதிபதி அவர்களே மாற்றுத்திறனாளிகளுக்கான 3 வீதம் தொழில் வாய்ப்பினை உறுதி செய்யுமாறும் தேர்தல்களில் எமது வாக்குகளை அளிப்பதற்கான வசதிகளைப் பெற்றுத் தாருங்கள் எனவும் தமது தேவையை இலகுவாக பெற்றுத் தருவதற்கான விசேட அடையாள அட்டையை பெற்றுத் தருமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்குமாறு இந்த பெனர் அமைக்கப்பட்டிருந்தது.
இது தொடரபாக கருத்து தெரிவித்த WADTCO மாற்றுத் திறளாளிகள் அமைப்பின் தலைவர் கிருஸ்டி அன்டனி கருத்து தெரிவிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான விசேட வேலைத்திட்டம் (2014) ஒன்றை முன்னெடுத்திருந்தார்.இது முழுமையாக அமுலுக்கு வரவில்லை எனவே தற்போதய ஜனாதிபதியும் அமையவுள்ள அரசாங்கமும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்குமாறு எமது கோரிக்கை முன்வைக்கின்றோம்.
0 Comments:
Post a Comment