ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது பண்டாரநாயக்க பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு உரித்தான கட்சியாகும். இக்கட்சியில் பண்டாராரநாயக்க பரம்பரையை சேர்ந்தவர்களால் தான் அங்கு தலைவர்களால் வரமுடியும்.
அதேபோன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கலந்துரையாடல் கூட்டம் மட்டக்களப்பு பாடுமீன் ஹோட்டலில் இன்று புதன்கிழமை(15)காலை 9.00 மணியளவில் ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளர் சொலமன்ட் சில்வஸ்ரர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள்,ஐக்கிய தேசிய கட்சி மாவட் அமைப்பாளர்,பிரதேச அமைப்பாளர்கள்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள்.
அங்கு ரவி கருணாநாயக்க மேலும் தெரிவிக்கையில்...
ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டிலே ஒரு வரலாற்றைக் கொண்ட கட்சி ஆகும். இதனை முற்று முழுதாக அழிப்பதற்கு பலர் முயற்சிக்கின்றார்கள். கடந்த காலங்களில் எமது கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்களால் ஒன்று சாதிக்க முடியாமல் போயுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்களால் நாட்டு மக்களுக்கு ஒன்றும் சாதிக்க முடியாமல் பல விமர்சனங்களுக்குள்ளாகி மக்களால் பாடம் புகட்டப்பட்டுள்ளது. ருக்மன் சேனாநாயக்க மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது பண்டாரநாயக்க பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு உரித்தான கட்சியாகும்.இக்கட்சியில் பண்ராரநாயக்க பரம்பரையை சேர்ந்தவர்களால் தான் அங்கு தலைவர்களால் வரமுடியும்.அதேபோன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்களால்தான் தலைவராக வரமுடியும்.ஆனால் ஐக்கிய தேசிய கட்சி குடும்ப ஆதிக்கம் செலுத்தும் கட்சி அல்ல.அது மூவின மக்களையும் ஒன்று சேர்க்கும் ஒற்றுமையான கட்சியாகும். ஐக்கிய தேசிய கட்சி பரந்துபட்ட மூவின மக்களுக்குரிய கட்சியாக திகழ்கின்றது. இதிலே யாரும் வரலாம்.யாரும் தலைவராக முடியும். எங்களுடைய ஐக்கிய தேசிய கட்சி யாரையும் ஒதுக்கி வாழமுடியாது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து எட்டு மாதத்தில் நாட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி அதிகரித்துள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது ஆட்சிக்கு வரும் முன் பல வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்து ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்கள்.புதிய அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகள் ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று எட்டு மாதங்களை கடந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொதுத்தேர்தலுக்கு முகம்கொடுத்துள்ளார்கள்.ஆட்சியை கைப்பற்றியதும் பொருட்களின் விலையை இலகுவான முறையில் அதிகரித்தது.பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பொருளாதரத்தை பெற்றுக்கொள்வதிலும்,விரும்பி யவாறு பொருட்களை வாங்குவதிலும் திண்டாடுகின்றார்கள்.பாண்,சீனி, பால்மா,பருப்பு,கோதுமைமா, சமையல் எரிவாயு, உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இவ்வாறு மலைபோல் அதிகரித்துள்ள விலைவாசியை மட்டுப்படுத்துவதற்கு ஐக்கிய கட்சி மும்முரமாக செயற்படுகின்றது. இதனை இந்த நாட்டில் மூவின மக்களும் சிந்தித்து செயற்பட வேண்டும்.அதற்காக மக்கள் ஐக்கிய தேசியகட்சிக்கு ஆணை வழங்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்களை பொதுத்தேர்தலில் வாக்களித்து பலப்படுத்துங்கள்.ஐக்கிய தேசியகட்சியானது நாட்டில் உள்ள இனங்களுக்கிடையில் பிளவுகளையும்,பிரிவினைகளையும் தோற்றுவிக்காது.எங்கள் கட்சி மக்களிடையே சமாதானத்தையும், புரிந்துணர்வையு ம் தோற்றுவிக்கும். முரண்பாடுகளை நாங்கள் இந்த மாவட்டத்திலும், நாட்டிலும் தோற்றுவிக்கமாட்டோம்.நாட்டு மக்களின் நலன்சார்ந்து ஐக்கிய தேசிய கட்சி இதுவரை காலமும் உழைத்தது. எப்போதும் நாட்டுமக்களை விட்டு குடும்ப ஆட்சிக்கு வித்திடமாட்டோம்.நாட்டுமக்களை நேசிக்கும் உன்னதமான,உண்மையான கட்சி என்றால் ஐக்கிய தேசியகட்சியாகும். நாட்டுமக்கள் நலன்சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பதற்கு இம்முறை ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களியுங்கள் எனத்தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment