விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மரணம்.
கல்குடா பொலிஸ் பிரிவு வாழைச்சேனை – பேத்தாழை வீதியில் புதன்கிழமை 03.06.2020 மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சிறிய ரக பட்டா வாகனம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய குறுக்கு வீதி அண்டி வசிக்கும் அப்துல் நாசர் நைரூஸ் (வயது 18) என்பவரே பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் அவ்வீதியால் சென்ற சிறிய ரக பட்டா வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment