25 Apr 2020

முதலைக்குடாவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை : பெரும் தொகையான பொருட்கள் மீட்பு

SHARE
(துசா)

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலைக்குடா ஆற்றினை அண்டிய களப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று வெள்ளிக்கிழமை(24)முற்றுகைசெய்யப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில், முதலைக்குடா கிராம அமைப்புக்கள், கிராமசேவை உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து இந்நிலையத்தினை முற்றுகையிட்டு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் கோடா போன்றவற்றினை கைப்பற்றியுள்ளனர்.


இதன்போது, கோடா, கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் வறல், சிலிண்டர், கொள்கலன், அடுப்பு போன்ற உபகரணங்களையும் கைப்பற்றியதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் அண்மைக்காலங்களாக முற்றுகையிடப்பட்டு வருகின்றன. இதன்போது பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் மதுபான விற்பனை நிலையங்கள் பூட்டப்பட்டுள்ள நிலையிலும், கசிப்பு உற்பத்தி அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், இவ்வாறான உற்பத்தி நிலையங்களை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளையும் அனைத்து தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.









SHARE

Author: verified_user

0 Comments: