
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் எக்காரணம் கொண்டும்
அதிபர்களோ, ஆசிரியர்களோ மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடவிடயங்களையோ, வினாத்தாள்களையோ
நேரடியாக வழங்கவேண்டாம். என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று திங்கட்கிழமை 27ம்திகதி பகல், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின்
பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரனால் ஊடக அறிக்கை மூலம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் அதிபர்கள், ஆசிரியர்கள் பிள்ளைகளின் வீடுகளுக்குச்
சென்று இலவசமாக பாடம் நடாத்துவதாகவும், வினாத்தாள்கள் வழங்குவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப்
பின்பற்றுங்கள், முதலில் உயிர் பாதுகாப்பு அதன் பின்னரே அனைத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, ஆபத்தின் ஆழத்தைப்புரிந்து கொண்டு, அனைவரும் அரசாங்கத்தின்
அறிவிறுத்தல்களுக்கமைவாக செயற்படுங்கள். எனவும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின்
பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 Comments:
Post a Comment